வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரில்:
பிரத்தியேக வீட்டு உபயோக சர்வதேச ஜவுளி கண்காட்சி ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் நடைபெறும்.
இந்தக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து 350 க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
இதில் 75 க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து மிகவும் சிறப்புடன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பங்கேற்க உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இக்கண்காட்சியில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி குழுமம் (HEPC) சார்பில் இந்தக் கண்காட்சியில் 75 க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருத்து பங்கேற்கின்றனர். அவர்களுக்கு பயணம் பங்கேற்ப்பு சலுகைகள் வழங்கப் படுகிறது.
மேலும் இத்தகைய ஜவுளி கண்காட்சியில் (பிராங்க்பர்ட்), உலகத்தில் பல நாடுகளில் இருந்து வருவோரையும், கவரும் வகையில் கண்காட்சியில் பங்கேற்கும் ஏற்றுமதியாளர்கள் அவர்களது ஜவுளி பொருட்களை சிறப்புடன் அமைத்திட வேண்டி நம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறப்பு கருத்தரங்கம் “Colour Trends & Visual Merchandising” விழிப்புணர்வு நிகழ்ச்சியை HEPC கரூரில் நடத்தியது. இதில் தேசிய ஜவுளி வடிவமைப்பு கல்லூரி(NIFT) பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி சிறப்பாக அக்டோபர் 7 ம் தேதி கரூரில் நடைபெற்றது.
அதில் பிராங்க்பர்ட்டில் பொருட்களை காட்சி படுத்தும் போது, ஜவுளி பொருள்களை எந்தெந்த நிறங்களைப் பயன்படுத்தி கண் கவரும் வகையில் தயார் செய்து எவ்வாறு அப்பொருட்களை காட்சிப் பொருளாக வைத்து வெளிநாட்டு வியாபாரிகளை கவர்ந்து நல்ல ஆர்டர்களை பெறுவது, மிக முக்கியமாக தற்போது நிகழ்வில் எது மாதிரியான ஜவுளி பொருட்கள் வாங்குவோரின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் அவற்றை காட்சி படுத்தும் இடங்களை அறிதல் எப்படி என்ற வியாபார உத்திகளை சென்னையில் இருந்து வந்த பேராசிரியர்கள் பங்கேற்ற அனைவருக்கும் எடுத்துரைத்தனர்.
இந்தக்கருத்தரங்கில் HEPC-யின் செயல்இயக்குனர் திரு N. ஶ்ரீதர் அனைவரையும்
வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு P.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.